தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, கோவை, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூலை 17) முதல் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இதனால், ஜூலை 22ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மிதமான மழை நீடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
