ஈரான்-பிராந்திய நாடுகளுடனான கூட்டம் ஒத்திவைப்பு

தெற்கு ஓமனில் செப்டம்பர் 14ஆம் நாள் நடைபெறவிருந்த பிராந்திய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கூட்டம் நடைபெறும் நாள் பற்றிய தகவல்கள் வெளியிப்படவில்லை என ஓமன் வெளியுறவு அமைச்சகம் உள்ளூர் நேரப்படி 13ஆம் நாளிரவு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப் போக்குவரத்து குறித்து ஈரானுக்கும் ஓமனுக்குமிடையிலான கலந்தாய்வு முடிவு, இக்கூட்டத்தின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அறிவிக்க வேண்டும் என ஈரான் முன்னதாக அறிவித்திருந்தது.

தற்போதைய ஹோர்முஸ் நீரிணை, அரசியல் போட்டி மற்றும் இராணுவ மோதல் ரீதியில் இரட்டை அபாயத்தை எதிர்நோக்குகிறது. அமெரிக்காவும் ஈரானும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கருத்து வேற்றுமைகள் அதிகம். பரஸ்பர நம்பிக்கை இன்மையால் குறுகிய நேரத்தில் இரு நாடுகளுக்கிடையில் மோதலுக்கு முடிவு எட்டப்படவில்லை. இப்பின்னணியில், பிராந்திய நாடுகள், குறிப்பாக, வளைகுடா அரபு நாடுகள் நிலைப்பாட்டை ஒருங்கிணைந்து, ஈரானுடன் மேலதிகமான தொடர்புகளையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

You May Also Like

More From Author