பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
https://youtube.com/playlist?list=PL-5KyvrWyzkXLwVDQKdyx_n9534w-anAV&si=H_EIpMjKRj7_3oD1
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், உற்சவர் திருக்குளத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து அங்குச தேவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமியை தரிசித்தனர்.
https://youtube.com/playlist?list=PL-5KyvrWyzkXLwVDQKdyx_n9534w-anAV&si=H_EIpMjKRj7_3oD1
தொடர்ந்து பக்தர்களும் திருக்குளத்தில் புனித நீராடினர். தீர்த்தவாரி நிறைவடைந்ததும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
