ஜோர்டானின் முன்னாள் தலைமையமைச்சர் ஓமர் அல்-ரஸ்ஸாஸ் பலமுறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது அவர் கூறுகையில், அடிப்படை ஆராய்ச்சியை, பயன்பாட்டு ஆராய்ச்சியாக மாற்றம் செய்தல், பயன்பாட்டு ஆராய்ச்சியை, வணிகப் பொருட்கள் மற்றும் சேவையாக மாற்றம் செய்தல் ஆகிய துறைகளில் சீனா முன்னணியில் உள்ளது. தற்போது, செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதர் தொழில் நுட்பம், எண்ணியல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கொண்ட காலத்தில் நுழைந்துள்ளோம். இத்தொழில் நுட்பங்களின் சிறப்பான பயன்பாட்டை சீனா முன்னேற்றி வருகிறது என்றார்.
1977ஆம் ஆண்டு சீன-ஜோர்டான் தூதாண்மை உறவு நிறுவப்பட்டது முதல் இதுவரை, இரு நாடுகள் எப்போதும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமத்துவ முறையில் செயல்பட்டு, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. 2015ஆம் ஆண்டு, இரு நாடுகள் நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்கின. இது குறித்து அவர் கூறுகையில், இரு நாட்டுறவு எப்போதுமே நெருக்கமானது. கடந்த 10 ஆண்டுகளாக, இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பல்வேறு ஒத்துழைப்புகள் சாதனைகளைப் பெற்றுள்ளன. மேலும், பிரதேச அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலான சமாதான சக வாழ்வை முன்னேற்றுவதற்காவும் சீனாவும் ஜோர்டானும் அரும் பாடுபட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
தவிரவும், நெடுநோக்கு சார்ந்த துறைகளைப் பார்க்கும் போது, பசுமையான எரியாற்றல், இயற்கை மூலவள மேலாண்மை, உயர்நிலை உற்பத்தி மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் பெரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
