விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Estimated read time 0 min read

விநாயகர் சதுர்த்தி பண்டிகை, பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லால்பாக்ஷா ராஜா பகுதியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஸ்ரீகணேஷ் கோவிலில், மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பசவனகுடியில் உள்ள விநாயகர் கோயிலில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கைரதாபாத்தில் 69 அடி உயர பிரம்மாண்ட பஞ்சமுக விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர், பிரம்மாண்ட விநாயகர் சிலை முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாசில், விநாயகர் சிலையை மாநில அமைச்சர் திலிப் கோஷ் திறந்து வைத்தார். கணேஷ் உட்சவம் மேற்கு வங்கம் முழுவதும் கொலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ‘ஷங்க்நாத்’ குழுவினர் தற்காப்புக் கலை நிகழ்ச்சி நிகழ்த்தி ஊர்வலமாக வந்து வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் சாம்பல் அருகே சந்தௌசியில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான மக்கள் விநாயகர் சிலையை ஏந்திக்கொண்டு, வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விநாயகர் கோவிலில், பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சென்று தீபம் ஏற்றி, விநாயகரை வழிபட்டனர்.

You May Also Like

More From Author