அமித்ஷா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

காந்திநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

குஜராத் மாநிலத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7 -ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்குள்ள காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

அவர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனையொட்டி, அகமதாபாத்தில் உள்ள சனந்த் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோட்ஷோ நடத்தினார். இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

You May Also Like

More From Author