அமெரிக்க-ஈரான் நிலைமை குறித்து சீனாவின் வேண்டுகோள்

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் 27ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையில் ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பொது கூட்டத்தில் வலியுறுத்துகையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நிறுத்தத்தை நனவாக்கி, பேச்சுவார்த்தையை நடத்த பல்வேறு தரப்புகள் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது பதற்றமான மத்திய கிழக்கு நிலைமை தொடர்ந்து தீவிரமாகி வருவதால், பிராந்திய மற்றும் உலகின் அமைதிக்கும் நிதானத்திற்கும் கடும் பாதித்துள்ளது. அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தேக்க நிலையில் உள்ளது. ஈரான் மீதான புதிய சுற்று இராணுவத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்ட கூற்றுகளால் இந்நிலைமை மேலும் தீவிரமாகி வருவதில் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு, உண்மையான பலதரப்புவாதம் மற்றும் அரசியல் தீர்வுகளில் ஊன்றி நின்று, போர் நிறுத்தத்தை நனவாக்கி, பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி, தூதாண்மை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  

Please follow and like us:

You May Also Like

More From Author