சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜெங் ஜியன்பாங் குழுவுக்குத் தலைமை தாங்கி, இந்தியாவின் புது தில்லியில் 26 மற்றும் 27ஆம் நாள் நடைபெற்ற 12வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய போது, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு திசையை வெளிக்காட்டினார் என்றார். பிரிக்ஸ் நாடாளுமன்ற ஒத்துழைப்பானது பிரிக்ஸ் ஒத்துழைப்பில் ஒரு முக்கிய பகுதியாக திகழ்கிறது என்பதோடு, பிரிக்ஸ் நாடாளுமன்றங்கள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சர்வதேச ஒழுங்கை மேலும் நியாயமான மற்றும் சமமான திசையில் வழிநடத்தவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கின் போது, ஜெங் ஜியன்பாங் இந்தியா, ரஷியா, தாய்லாந்து, உகாண்டா, பெலாரஸ், கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி, சட்டமியற்றும் அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
