தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பிரதான், முந்தைய கல்வி முறை சான்றிதழ் மற்றும் பட்டங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது என்றார்.
ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முதன்மையான பரிந்துரை திறன் சார்ந்த கல்வியை அறிமுகப்படுத்துவதே என்றும், இது மாணவர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை உருவாக்குபவர்களாக மாற்றும் என்றும் கூறினார்.
11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்
