சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 16ஆம் நாள் சீன அரசவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உள்நாட்டு சுழற்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் அமலாக்க பணிகளை ஆய்வு செய்தார். மேலும் புதிய எரியாற்றல் வாகனத் தொழிலின் ஒழுங்குமுறையை ஒழுங்குபடுத்துவது பற்றி கேட்டறிந்தார்.
உள்நாட்டு சுழற்சி வலுப்படுத்துவது பொருளாதாரத்தின் நிதானமான மற்றும் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய நெடுநோக்கு செயலாகும். நுகர்வை அதிகரிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை ஆழமாக மேற்கொண்டு உள்நாட்டு தேவையின் உள்ளார்ந்த ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர வேண்டும்.
மேலும், புதிய எரியாற்றல் வாகனத் தொழிலின் உயர் தரமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒழுங்கான போட்டியிடுவதன் நீண்டகால அமைப்பு முறையை முழுமைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் எல்லை நுழைவு மற்றும் வெளியேற்றத்துக்கான சீன மக்கள் குடியரசின் நிர்வாக விதிகளின் திருத்தம் பற்றிய அரசவையின் தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டுள்ளது.