போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் திங்கள் நடைபெறவுள்ளது
போஆவ் ஆசிய மன்றத்தின் பாங்காங் வட்ட மேசை கூட்டத்தின்போது, இம்மன்றத்தின் செயற்குழுத் தலைவர் பான் கிமூன் ஆகஸ்டு 26ஆம் நாள் கூறுகையில், போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 25 முதல் 28ஆம் நாள் வரை சீனாவின் ஹைய்நான் மாநிலத்தின் போஆவ் வட்டத்தில் நடத்தப்படும் என்றார்.
தற்போது, உலகப் பொருளாதாரம் மந்தமாக மீட்சியடைந்து வருகிறது. பிரதேச மோதல்கள் மோசமாகி உள்ளன. மனித குலத்தின் சமூகம் பல கூட்டு அறைக்கூவல்களைச் சந்தித்துள்ளது. உலக அமைதியைப் பேணிக்காத்து, உலக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு, ஆசிய நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆசிய வளர்ச்சி, உலகளவிலான முக்கிய பிரச்சினை ஆகியவற்றைக் கருப்பொருட்களாக கொண்ட போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம், சர்வதேச சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி, கூட்டு வளர்ச்சியை நாடி, பொது எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் பான் கிமூன் தெரிவித்தார்.