வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Estimated read time 0 min read

வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணை 4 நாட்களில் 3 அடி உயர்ந்து, நீர்மட்டம் 56.8 அடியை எட்டியுள்ளது.

நீர்வரத்து ஆயிரத்து 421 கன அடியாக உள்ளதால் அணையின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 12 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author