சீன ஊடகக் குழுமத்தின் செயற்கை நுண்ணறிவுடன் எதிர்காலம் அனுப்பவிப்பு என்ற வீட்டுச் சேவை ரோபோ மாநாட்டின் வெளியீட்டு விழா ஜூலை 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன் ஹய்சிவுங், அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் கட்சிக் குழுச் செயலாளர் ஹூவாங் சியௌவேய், சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்ற மன்றத்தின் தலைவர் ரேன் ஹூங்பின், சீன முதியோர் சங்கத் துணை தலைவர் கோஃபெய் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அன்றாட வாழ்விலுள்ள ரோபோ புரட்சியைச் சுற்றி ஆரோக்கிய பராமரிப்பு, செயற்கை நுண்ணறிவு வீட்டு உபயோக பொருட்கள், குடும்பக் கல்வி, குடியிருப்புப் பிரதேசத்தின் சேவகர் சேவை ஆகிய 4 துறைகளில் ரோபோக்களிடையே போட்டிகள் நடத்தப்படும். ரோபோக்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்
வீட்டுச் சேவை ரோபோ துறையின் வளர்ச்சிப் போக்கு பற்றிய அறிக்கை இந்த -விழாவில் வெளியிடப்பட்டது.