சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 19ஆம் நாளிரவு மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு அளித்த விருந்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில், மக்கெள பொருளாதாரத்தின் ஓரளவு பலதரப்பட்ட வளர்ச்சி புதிய சாதனையைப் பெற்று, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் புதிய காலக் கட்டத்தில் காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மக்கெளவின் சர்வதேச செல்வாக்கும் புகழும் பெருமளவில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்தார்.
ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள் என்ற கொள்கை, மத்திய அரசு மற்றும் தாய்நாட்டின் பெருநிலப்பகுதி மக்கெளவுக்கு அளித்த மாபெரும் ஆதரவு, சர்வதேச சமூகத்தின் ஆக்கப்பூர்வ பங்கெடுப்பு ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் மக்கெள குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றதற்குக் காரணங்களாகும் என்று தெரிவித்தார்.
மக்கெளவின் எதிர்காலம் குறித்து ஷிச்சின்பிங் எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார். முதலில், குவாங்தொங்-ஹாங்காங்-மக்கெள பெரிய வளைகுடா பகுதியின் கட்டுமானம் முதலிய நாட்டின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களுடன் மக்கெள மேலும் ஆக்கமுடன் இணைந்து சர்வதேச அரங்கில் மேலும் பங்காற்ற வேண்டும். இரண்டு, தாய்நாட்டையும் மக்கெளவையும் நேசிக்கும் அதே வேளையில், மக்கெள மேலும் திறந்து வைத்து, இணக்கமாக இருக்க வேண்டும்.
மிக பல திறமைசாலிகளைத் திரட்டி, அருமையான மக்கெளவை கூட்டாக கட்டியமைக்க வேண்டும். மூன்று, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை முன்னேற்றி, ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள் என்ற கொள்கையின் மேம்பாட்டை மேலும் நன்றாக வெளிக்கொணர்ந்து, மக்கெளவின் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.