ஈரான் -சீனா ரகசிய ஒப்பந்தம்: அமெரிக்க ராணுவ தளங்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதா ‘TEE-01B’?  

Estimated read time 1 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தில் இருந்தபோது, ஈரான் ரகசியமாகச் சீனாவிலிருந்து ஒரு உளவு செயற்கைக்கோளை பெற்று, அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை கண்காணித்ததாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.
கசிந்த ஈரானிய ராணுவ ஆவணங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC), சீன நிறுவனமான ‘Earth Eye Co. தயாரித்த TEE-01B என்ற செயற்கைக்கோளை 2024-ன் இறுதியில் ரகசியமாகப் பெற்றுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் சுமார் அரை மீட்டர் வரையிலான துல்லியமான படங்களை(0.5m resolution) எடுக்கும் திறன் கொண்டது.
இதன்மூலம் விமானப்படை தளங்களில் உள்ள விமானங்கள் மற்றும் வாகனங்களை ஈரானால் துல்லியமாக கண்காணிக்க முடிந்தது என அந்த செய்தி கூறுகிறது.

You May Also Like

More From Author