உலகத் திறன் போட்டியில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

48ஆவது உலகத் திறன் போட்டி செப்டம்பர் 22 முதல் 27ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெற உள்ளது. 5ஆவது உலகளாவிய எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் 23 முதல் 27ஆம் நாள் செஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது. சீனாவின் அழைப்பின் பேரில், மலேசிய தலைமையமைச்சர் அன்வர் இவ்விரண்டு நிகழ்வுகளின் துவக்க விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார். மேலும் கிர்கிஸ்தான் தலைமையமைச்சர் கசிமாலியேவ் வர்த்தகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 22ஆம் நாள் தெரிவித்தார்.

You May Also Like

More From Author