புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங்கை ஆட்சி புரியும் திட்டம் பற்றிய அறிக்கை வெளியீடு

புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங்கை ஆட்சி புரியும் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறை எனும் வெள்ளை அறிக்கையைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 19ஆம் நாள் வெளியிட்டது.

புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சியின் மத்தியக் கமிட்டி, வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியின் ஒட்டுமொத்த நெடுநோக்குப் பார்வையுடன், சின்ஜியாங் தொடர்பான பணிகளை மீளாய்வு செய்து, புதிய யுகத்தில் சின்ஜியாங்கை ஆட்சி புரிவதற்கான கட்சியின் திட்டத்தை உருவாக்கி, சின்ஜியாங்கின் பல்வேறு இலட்சியங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் படைக்கப்படுவதை முன்னேற்றியுள்ளது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். எதிர்காலத்தை எதிர்நோக்கி, சின்ஜியாங்கின் மாபெரும் நடைமுறையிலும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் மாபெரும் வளர்ச்சிப் போக்கிலும், புதிய யுகத்தில் சின்ஜியாங்கை ஆட்சி புரியும் கட்சியின் திட்டமும் ஆற்றலும் தொடர்ந்து மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் வழிகாட்டலுடன், சீனாவின் சின்ஜியாங்கின் வளர்ச்சிப் பாதை மென்மேலும் விரிவாகி, சின்ஜியாங்கின் எதிர்காலம் மேலும் ஒளிமயமிக்கதாக மாறும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Please follow and like us:

You May Also Like

More From Author