குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் திரையுலகம் 9 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
இதேபோல், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது ‘ராயன்’ படத்திற்கு வழங்கப்பட்டது. கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்காக, சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருதை சுரேன் ஜி பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சிறந்த இயக்குநருக்கான விருதை ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநருக்கான விருதை ‘மகாராஜா’ படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த அனல் அரசும் பெற்றுக்கொண்டனர்.
இதே போல நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான மகாராஜா படத்தில் விஜய்சேதுபதியின் மகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சச்சனா நமிதாஸுக்கும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
