கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர்.
https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz
கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், கேரள – தமிழக எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் பரவலாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவேலி மன்னரை செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவிகள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வண்ண வண்ண மலர்களில் அத்தப்பூ கோலமிட்டும், விளக்கேற்றியும் மாணவிகள் பாரம்பரிய உடையணிந்த உற்சாகமாக நடனமாடினர்.