வீரமணி வழக்கில் கொந்தளித்த முன்னாள் முதல்வர்…!!” 

Estimated read time 1 min read

வீரமணி வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக ஆட்சியில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஜெம் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதிகபட்ச தண்டனையைப் பெற வேண்டும் என்பதே தனது உறுதியான நிலைப்பாடு என்று அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் குறுகிய அரசியல் லாபம் அடைய முயல்வதாகவும், சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்துவது மிகவும் அருவெறுப்பான செயல் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த கால திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எவரையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் திமுக அரசுக்கு எப்போதுமே இருந்ததில்லை என்று தெளிவுபடுத்தினார்.

தற்போதைய ஆட்சியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாகப் புகார்கள் வந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி வழக்குகளை மூடிமறைக்கும் இழிசெயல்கள் அரங்கேறி வருவதாக மு.க. ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.

“>

எனவே, ஊடகங்கள் மூலமாகத் தன்மீதும் கட்சியின் மீதும் அநாவசியமான அவதூறுகளைப் பரப்புவதை ஆளும்கட்சியினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே அனைவரின் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

More From Author