எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

Estimated read time 0 min read

சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது. பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் 3177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளோம். 7,000க்கு மேற்பட்ட ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. 12,000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர் பாபு

ஆதி திராவிடர் வசிக்கின்ற பகுதியில் 5000 கோயில்களுக்கு நிதி உதவி செய்துள்ளோம். மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஆன்மிக பயணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளோம். 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். 41 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பொங்கல் கருணை தொகை என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி நாள் முழுக்க சொல்லிக்கோண்டே இருக்க முடியும். அந்த அளவுக்கு சாதனைகளை செய்துகொண்டே இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்கிற நோக்கி திராவிட மாடம் அரசு செய்யும் சாதனைகளை, வெறுப்பையும் சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் திமுக அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசின் ஆன்மீக தொண்டை பாராட்டுகின்றனர்.

நான் காவடி எடிப்பது போலவும், அமைச்சர்கள் அலகு குத்திக்கொண்டு தரையில் உருளுவது போலவும் நேற்று ஒரு வாரப் பத்திர்க்கையில் கார்ட்டூன் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை பார்க்கும்போதும் எனக்கு சிரிப்பு வரல, ரொம்ப பரிதாபமாக இருந்துச்சு. பக்திதான் நோக்கம் என்றால் நம் ஆன்மீகத்திற்குன் செய்தவற்றை பட்டியலிட்டு பாராட்டியிருக்கலாம். பல ஆண்டுகால வன்மத்தின் வெளிப்பாடாகத்தான் இப்படிப்பட்ட கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுடைய ஆதரவற்ற அவதூறுகளைப் பற்றி எனக்கு ஒரு போது கவலை இல்லை.

இவையெல்லாம் எனக்கு கவலை இல்லை.. இவைதான் எனக்கு ஊக்கம், உற்சாகம். இன்னும் நீங்கள் எங்களை கேலி செய்யுங்கள்; விமர்சனம் செய்யுங்கள்.. நான் அதைப்பற்றியெல்லாம் கவலை பட தயாராக இல்லை. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். திருநாவுக்கரசர் மொழி போல “என் கடன் பணிசெய்து கிடப்பதே”. என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன். நாம் தொடர்ந்து உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author