துண்டுதுண்டாக உடையும் அதிமுக! கட்சியிலிருந்து முன்னாள் எம்பி விலகல்

Estimated read time 0 min read

முன்னாள் எம்.பி.யும், மருத்துவர் அணி செயலாளருமான வேணுகோபால் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் அதிமுகவில் குழப்பங்கள் வெடித்துள்ள நிலையில் அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் எம்பி வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து போகவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள அதிமுக முன்னாள் எம்பி வேணுகோபால் கனத்த இதயத்துடன் விலகுகிறேன் எனக் கூறியுள்ளார். பட்டியல் சமூக மக்களிடம் அதிமுக நம்பிக்கை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு அதிமுக நாடாளுமன்ற குழு தலைவராக செயல்பட்டவர், 2 முறை திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author