“விஜய்க்கு பணமே தேவையில்லை!” பழ கருப்பையா அளித்த மிரட்டலான பேட்டி…  

Estimated read time 1 min read

பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அரசியல் விமர்சகர் பழ கருப்பையா, தவெக தலைவர் விஜய் குறித்தும் அவரது அரசியல் பயணம் குறித்தும் பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, விஜய்க்குப் பணத்தின் மீது எந்தவிதமான ஈர்ப்பும் கிடையாது என்றும், அவர் தற்போது பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

தற்போதைய ஆட்சியை விமர்சித்துத் பேசிய அவர், எங்கு வேண்டுமானாலும் பணத்தைக் கொட்டிக் கொடுத்து வழக்குகளையோ அல்லது எஃப்.ஐ.ஆர்‌பதிவுகளையோ சுலபமாக மாற்றிவிடலாம் என்ற நிலை இந்த விஜய் அரசாங்கத்தில் ஒருபோதும் இருக்காது என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.

“>

மேலும், அரசியல் களத்தில் இதுவரை யாருமே சாதிக்காத பல புதிய விஷயங்களை விஜய் மிகக் குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டியுள்ளதாகவும் பழ கருப்பையா அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author