ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

Estimated read time 1 min read

ஆசிய விளையாட்டு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பானின் ஐச்சி- நகோயாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பூவம்மா ராஜு, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ், மானு டி.எஸ் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் இந்திய அணி பின்தங்கிய நிலையில், வீரர், வீராங்கனைகளின் விடாமுயற்சியால் வெற்றி வசமாகியது.

இறுதியாக ஓடிய வித்யா, 2-வது இடம் பிடித்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

வெண்கலம் வென்ற வியட்நாம் அணியை விட வெறும் 8 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தியா பதக்கத்தை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அணியில் இடம்பெற்றுள்ள இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமின்றி, தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷாலின் சாதனையை பாராட்டும் வகையில், தலா 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர்,

இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்..

You May Also Like

More From Author