நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை மேலும் மூன்று நாட்கள் (நவ.11, 12, 13) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடா் மழையின் காரணமாக ஏற்கெனவே 18 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
