அரசுப் பணம் ரூ.22 கோடி முறைகேடாகக் கையாடல் செய்யப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 22 கோடி ஆன்லைன் முறையில் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஹேக்கர்கள் திருடியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 5 கோடி, நாகை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 3.10 கோடி திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனிடையே ஊரக வளர்ச்சித்துறையின் ரூ.22 கோடி மோசடி குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் தகவல்களை பயன்படுத்தி கைவரிசை காட்டியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
