தமிழக சட்டசபை நேரலைக்கு ரூட் கிளியர்! 2 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம்!

Estimated read time 1 min read

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தின் அலுவல் நிகழ்வுகளைத் தடையின்றி நேரலை செய்வதற்குத் தனியார் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தற்போதைய தவெக (TVK) ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சட்டமன்றப் பேரவைக் கூட்டத் நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், எதிர்கால நிகழ்வுகளைச் சீராகத் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரவிருக்கும் காலங்களில் சட்டமன்றக் கூட்டத் தொடர்களைத் தரம் குறையாமல் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 2027 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலகட்டத்திற்குச் சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில் சுமார் 160 நாட்களுக்குச் சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை செய்யப்படவுள்ளன. இதற்கான தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தகுதிவாய்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து டெண்டர்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் மக்கள் பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் மற்றும் ஆளும்-எதிர் கட்சிகளின் வாதங்களை மக்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேரலை ஒளிபரப்புப் பணிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையைப் பேணும் வகையிலும், ஜனநாயகத்தின் மாண்புகளை மக்களின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையிலும் அரசு இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டெண்டர் நடைமுறைகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் புதிய ஒப்பந்ததாரர் மூலம் நேரலை ஒளிபரப்புப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author