சீன ஊடகக் குழும–ஐ.நா ஒத்துழைப்புப் புரிந்துணர்வுக் குறிப்பாணை கையொப்பம்

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புப் புரிந்துணர்வுக் குறிப்பாணை நவம்பர் 12ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியுங், ஐ.நாவைச் சேர்ந்த உலகளாவிய தகவல் தொடர்புத் துறைத் துணைப் பொதுச் செயலாளர் மெரிசா ஃபுரேமின் அம்மையார் ஆகிய இருவரும் பெய்ஜிங் மற்றும் நியூயார்கில் இதில் கையொப்பமிட்டனர்.

இந்தக் குறைப்பாணையின்படி, சீன ஊடகக் குழுமமும் ஐ.நாவும், சர்வதேசத் தகவல் தொடர்பு, உயர் மட்டப் பரிமாற்றம், பொதுத் தகவல்களின் வெளியீடு, உலகளவில் ஊடக வளம் உள்ளிட்ட பல துறைகளில் யதார்த்த ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும்.

சீன ஊடகக் குழுமம் ஐ.நாவுடன் கையொப்பமிட்ட முதலாவது பன்னோக்க நெடுநோக்கு ஒத்துழைப்பு உடன்படிக்கையாக இது திகழ்கின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author