சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!

Estimated read time 0 min read

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை மழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது.

You May Also Like

More From Author