சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 7ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப்க்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் நிலைப்புத்தன்மை, ஆரோக்கியம், தொடரவல்ல வளர்ச்சியுடன் கூடிய சீன-அமெரிக்க உறவு இரு நாடுகளின் பொது நலன் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருத்தமானதாகும் என்றார்.
இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பு, பஞ்ச சீலக் கோட்பாடுகள், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருத்து வேற்றுமையை உகந்த முறையில் கையாண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி புதிய காலத்தில் இரு நாடுகளுக்குரிய சரியான அணுகு முறையைக் கண்டறிந்து இரு நாடுகளுக்கு மட்டுமல்லாது உலகத்துக்கும் நன்மைகளை படைக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.