சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங், 23ஆம் நாள் மாலை, பாரிஸில் பிரான்ஸ் செனெட் அவை தலைவர் Gérard Larcher ஜெரார் லார்செருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
லீ ச்சியாங் கூறுகையில்,
சீன-ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான உறவுகளில் சீன-பிரான்ஸ் உறவு முன் நிலையில் இருந்து வருகின்றது. நூற்றாண்டு கண்டிராத நிலைமையைச் சந்திப்பதோடு, இருதரப்பும், இருநாட்டுறவின் வளர்ச்சியைப் பேணிக்காக்க வேண்டும். பிரான்ஸுடன் இணைந்து, பாரம்பரிய தொழிற்துறையின் வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு, தூய்மை வளர்ச்சி உள்ளிட்ட புதிய துறைகளின் ஒத்துழைப்புகளை முன்னேற்ற சீனா விரும்புதவாக லீ ச்சியாங் தெரிவித்தார்.