கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நைரோபி-மொம்பாசா தேசிய நெடுஞ்சாலையில், மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற கிறிஸ்தவ பக்தர்கள் பயணித்த வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த வேன் மீது பலமாக மோதியதில் வேனில் பயணித்த பயணிகள் அனைவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நகூரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இன்று சிறப்பு மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க மொம்பாசா நகரில் இருந்து வேனில் கிறிஸ்தவ பக்தர்கள் நகூரு பகுதிக்கு புறப்பட்டனர். அந்த வேனில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், நைரோபி – மொம்பாசா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் வேகாமாக வந்த லாரி எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
