முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீன சர்வதேசக் கண்காட்சி, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஹங்கேரியைச் சேர்ந்த ஒரு மின்னாற்றல் தொழில் நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் 2ஆவது முறை சீனாவுக்கு வருகை தந்தார். முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீன சர்வதேசக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு, அவர் தியான்ஜின் மாநகருக்குச் சென்றார். பின்னர், கான்சு மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணங்களில் பல சீனத் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்கினார்.
இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் உயர் தொழில் நுட்பத் துறையில் பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. மாபெரும் சந்தை, முழுமையான தொழிற்துறை முறைமை, செழிப்பான மனித வளம், தொடர்ச்சியாக விரிவாக்கப்படும் திறப்பான கொள்கை இலாபம் முதலியவை, உலக மூலதன மற்றும் புத்தாக்க வளத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.
