அதிமுக கூட்டணியில் பிளவு: 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி – டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 43 வேட்பாளர்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களைக் கூறுவதாகக் கிருஷ்ணசாமி சாடினார்.
தான் நேரில் சென்றும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வைகைச்செல்வன் ஆகியோர் தனது இல்லத்திற்கு வந்தும் பேச்சுவார்த்தை நடத்தியதை அவர் உறுதிப்படுத்தினார். இறுதியில் 5 தொகுதிகள் வரை இறங்கி வந்தும் அதிமுக உரிய மதிப்பளிக்கவில்லையெனக் குற்றம் சாட்டினார்.
21 மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்வே இதற்குப் பின்னால் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author