சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்லோவை 15ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்து பேசினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் ரஷியாவும் இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை ஆழமாக முன்னேற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் ஷாங்காய் ஒத்தழைப்பு அமைப்பு ஆசிய-ஐரோப்பிய மண்டலத்தின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு, இரு நாடுகள் தொடர்ச்சியான புதிய உயிராற்றலைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவுடன் பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன் தரும் ஒத்தழைப்பை வலுப்படுத்தி சர்வதேச விவகாரங்களில் பரிமாற்றங்களை மேற்கொள்ள ரஷியா விரும்புவதாக லாவ்லோவ் கூறினார்.