பயங்கரவாத எதிர்ப்பை அரசியல் மயமாக்கத்தையும் வசதியாகப் பயன்படுத்துவதையும் எதிர்க்கின்றது சீனா

பயங்கரவாத எதிர்ப்பை அரசியல் மயமாக்குவதையும் அதன் மூலம் பயனடைய நினைப்பதையும் சீனா எதிர்க்கின்றது என்று ஐ.நாவுக்கான சீனாவின் துணைப் பிரதிநிதி சுன்லெய் ஐ.நா பொதுப் பேரவைக் கூட்டத்தில் 5ஆம் நாள் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதம் மனித குலத்தின் பொது எதிரியாகும். இது கொண்டு வரும் அச்சுறுத்தலில் எந்த நாடும் தப்பிக்க முடியாது. சீனா பொதுவான, ஒட்டுமொத்தமான, ஒத்துழைப்பு. தொடரவல்ல பாதுகாப்புப் பார்வையை பின்பற்றும் அதேவேளையில், உலக அளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைக் கூட்டாகச் சமாளிப்பதையும் செயலாக்க முறையில் முன்னேற்றி வருகின்றது என்று தெரிவித்தார்.

பயங்கரவாதத்தின் மூலக் காரணங்களைப் பல்வேறு நாடுகள் முயற்சியுடன் நீக்கி, பிராந்திய மோதல்கள் மற்றும் சூடான பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப் பாடுபட வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகிய அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இத்தகைய பிராந்திய அமைப்புகளின் மேம்பாடுகளையும் ஒருங்கிணைப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தி, பயங்கரவாத எதிர்ப்புக்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும் என்று சுன்லெய் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author