2024ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில் உற்பத்தியாளர் விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காடு குறைவாகும்.
இவ்விகிதத்தின் குறைவு அளவு அக்டோபர் திங்களை விட 0.4 சதவீத புள்ளிகள் குறைவாக இருந்தது. இக்குறியீடு கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.1% அதிகரிப்பு ஏற்பட்டது. உற்பத்தியாளர் கொல்முதல் விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காடு குறைவாகும். இது அக்டோபர் திங்களை விட 0.1 சதவீதம் குறைவு.
ஜனவரி முதல் நவம்பர் வரை சராசரியாக உற்பத்தியாளர் விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.1 விழுக்காடு குறைவாகும். உற்பத்தியாளர் கொள்முதல் விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.2விழுக்காடு குறைவாகும்.
தொழிற்துறை உற்பத்தியாளர் விலையில் உற்பத்தி மூலபொருட்களின் விலை 2.9% குறைந்தது. இதனால் உற்பத்தியாள விலை குறியீடு சுமார் 2.12 சதவீத புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.