சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் அலி பகுதியில் முதலாவது காற்று மின் உற்பத்தித் திட்டமான சி.டி.என் காய்ட்சே 50 மெகாவாட் காற்று மின் திட்டத்துக்குத் தேவையான அனைத்து காற்றுச் சுழலிகளும் பொருத்தப்பட்டதை அடுத்து, திட்டம் சோதனைக் கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. இத்திட்டமானது 2026ஆம் ஆண்டின் இறுதியில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கடல் மட்டத்திலிருந்து 4600முதல் 4800 மீட்டர் உயரமான அலி பீடபூமியில் அமைந்துள்ளது. இத்திடத்திற்காக 5 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைத் தனியாக கொண்ட 10 காற்று மின்னாக்கிகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் ஆண்டுக்கு 18கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது, சுமார் 1 லட்சத்து 50ஆயிரம் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பதற்குச் சமமானது. அதோடு, இத்திட்டத்தின் மூலம, இப்பிரதேசத்தின் பசுமை எரியாற்றல் விநியோக இடைவெளியும் குறைக்கப்படும்.
