தேசிய விழா விடுமுறையில் பிரபலமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணம்

Estimated read time 0 min read

சீனத் தேசிய விழா விடுமுறையின் போது, நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களிலும் வெளிநாட்டு பயணங்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது என்று மொபைல் தகவல் தொடர்பு சார்ந்த பெருந்தரவு தளத்தின் பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சராசரி பயணத் தூரம் 345 கிலோமீட்டரை எட்டியது. இதில், மாகாணங்களுக்கு இடையிலான பயணங்கள் மொத்தத்தில் 53 சதவீதத்தை வகித்து, கடந்த ஆண்டை விட 2 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளன.

இவ்விடுமுறையின் போது சீனாவிற்குள் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். மொத்த பயணிகளில் அவர்கள் சுமார் 70 சதவீத பங்கை வகிக்கின்றனர். மேலும், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஓசியானியா உள்ளிட்ட தொலைதூரப் பிரதேசங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author