பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரின் சிறப்பு பேட்டி

Estimated read time 0 min read

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்க பொருளாதார நிபுணருமான தாமஸ் சார்ஜென்ட் பலமுறை சீனாவில் பயணம் செய்து, சீனாவின் வளர்ச்சி அதிசயமாக உள்ளது என்று பாராட்டுகின்றார்.

சீன ஊடக குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், பல தசாப்தங்களில் வெளிநாட்டுத் திறப்பு, எல்லை கடந்த தாராள வர்த்தகம் உள்ளிட்ட கொள்கைகளை சீனா கடைபிடித்து வருகிறது என்பது சீனாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். ஆனால் அமெரிக்கா வர்த்தகப் போரைத் தொடங்கியது. அதன் வளர்ச்சிக்குப் பாதகமானது என்று தெரிவித்தார்.

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இத்திட்டங்கள் புத்திசாலிகளால் ஆழ்ந்த யோசனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் பசுமை வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பெய்ஜிங்கிற்குச் சென்ற போது அங்குள்ள காற்றின் தரமும் வாகனங்களின் நிலையும் தற்போதைய நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. சீனாவில் தயாரிக்கப்பட்ட சூரிய பேனல்களும் மின்சார வாகனங்களும் அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். ஆனால் அமெரிக்கா இந்த தயாரிப்புகள் மீது கூடுதல் வரிகளை விதித்தது. இது தனது பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா இறக்குமதி செய்ய வேண்டிய தயாரிப்புகள் இவை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author