சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்படும்போது வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.தற்போதைய சூழல் குறித்து எந்தவொரு வீடியோ அல்லது செய்தியையும் பரப்புவதையோ தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் தேவைப்படும்போது அவ்வப்போது புதிய தகவல்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.24 மணிநேர அவசர கட்டணமில்லா உதவி எண் 8002471234 தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இந்தியச் சமூகத்தினர் புதிய தகவல்களைப் பெறத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடரலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
