2026ம் ஆண்டு பொது மக்களின் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை பற்றிய கருத்தரங்கு அக்டோபர் 12 மற்றும் 13ஆம் நாட்களில் பெய்ஜிங் மாநகரிலுள்ள தேசியக் கூட்ட மையத்தில் நடைபெறவுள்ளது. எண்ணியல் யுகம் மற்றும் மக்களின் நகரம் என்பது இதன் தலைப்பாகும்.
சீனாவில் பல ஆண்டுகளாக வசிக்கின்ற போலந்து பதிவரான பியோடர், என்பவர் வெளிநாட்டவர் என்ற பார்வையில், ஷென்சென் நகரின் நிர்வாக சேவை குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். புகார் செய்வதற்கான தெளிவான வழிமுறைகள், வசதியான சேவைகள் முதலிவற்றினால், தான் ஒரு வெளிநாட்டவரைப் போலன்றி உள்ளூர் நகரவாசிகளுள் ஒருவரைப் போன்று உணர்வதாக அவர் தெரிவித்தார்.
