வட கொரியாவின் தேசிய தினம் குறித்து கிம் ஜாங் உன்னுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 78வது ஆண்டு நிறைவு குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் செப்டம்பர் 9ஆம் நாள், கொரியத் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும் வட கொரியாவின் தேசிய விவகார ஆணையத்தின் தலைவருமான கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், பொதுச் செயலாளர் கிம் ஜாங் உன்னின் தலைமையின் கீழ், வட கொரியாவின் கட்சியும் மக்களும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து, குறிப்பிடத்தக்க சாதனைகளை பெற்றுள்ளதாகவும், இது குறித்து சீனா மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கான உத்திப்பூர்வ வழிகாட்டலைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், கட்சி மற்றும் நாட்டின் லட்சியத்தின் வளர்ச்சியை கூட்டாக முன்னெடுக்கவும், இருநாட்டு மக்களின் நல்வாழ்வையும் நட்புறவையும் மேம்படுத்தவும், பிரதேச மற்றும் உலக அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மேலதிக பங்களிப்பை வழங்கவும், கிம் ஜாங் உன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author