சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 18ஆம் நாள் பிற்பகல், துஷாபே நகரில், தஜிகிஸ்தான் தலைமையமைச்சர் ரசூல்சோடாவை சந்தித்துரையாடினார். அப்போது லீச்சியாங் கூறுகையில், அடுத்தாண்டு, இரு நாட்டின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவாகும். தஜிகிஸ்தானுடன் இணைந்து நெடுநோக்கு கூட்டு நம்பிக்கையை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரவளித்து, இரு தரப்புறவை புதிய நிலைக்கு கொண்டு செல்வதைத் தாண்டி, இரு நாட்டு மக்களுக்கு பயனளிக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
ரசூல்சோடா கூறுகையில், தஜிகிஸ்தான்-சீன பன்மூக ஒத்துழைப்புகளை தஜிகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, உயர்தர முறையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் கூட்டுக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, பல்வேறு துறைகளிலுள்ள பரஸ்பர ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மானுடப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரிவாக்கி, பல தரப்பு ஒத்துழைப்புகளை நெருக்கப்படுத்தி, இரு தரப்புறவு மேலும் புதிய சாதனைகளைப் படைக்க தஜிகிஸ்தான் பாடுபடும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்புக்கு பிறகு, இரு நாட்டுத் தலைமையமைச்சர்களின் முன்னிலையில், அடிப்படை வசதி கட்டுமானம், கல்வி, ஊழல் எதிர்ப்பு, வரையறைமயமாக்க ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல துறைகளின் ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன.
