சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் தொடக்க ஆண்டின் தேசிய விழா விடுமுறையின் போது, சுற்றுலா பயணம் பிரபலமாகி வந்துள்ளது. சீன மக்களின் பயணம், சிறந்த வாழ்க்கைக்கான விருப்பத்தைக் காட்டுகின்றது.
இவ்விடுமுறையில் நுகர்வுக்கான உயிராற்றல் மிக்க சீனா காணப்பட்டது. அக்டோபரின் முதல் ஆறு நாட்களில், முக்கியமாகக் கண்காணிக்கப்படும் 78 வணிகப் பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் இயக்க வருவாய், கடந்த ஆண்டை விட முறையே 2.5 சதவீதம் மற்றும் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளன. பசுமையான அறிவார்ந்த தயாரிப்புகள் உள்ளிட்ட புதிய வகையிலான நுகர்வு, மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்விடுமுறையின் மூலம் திறந்த சீனாவையும் உலகம் கண்டுள்ளது. தற்போது சர்வதேச சுற்றுலாவுக்கு மிக அதிகமான பயணிகளைக் கொண்டுள்ள நாடாகவும், உலகளவில் சுற்றுலா செல்வதற்கான முக்கிய இடமாகவும் சீனா மாறியுள்ளது. சீனாவிற்குள் சுற்றுலாவுக்கான சேவை அமைப்புமுறையைச் சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
9 ஆவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி மற்றும் 33வது ஏபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தில் முறையே ஷாங்காய் மாநகரம் மற்றும் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளன. சீனா தனது உயர்தர திறப்பு கொள்கையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறது.
