அபிஜித் திப்கேவின் பாட்டி சாவித்ரிபாய் திப்கே காலமானார்..!

Estimated read time 1 min read

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவரான அபிஜித் தீப்கேவை டெல்லி விமான நிலையத்தில் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்திற்காக அவர் டெல்லிக்கு வந்திருந்தபோது விமானத்தில் கைது செய்யப்பட்டார். அபிஜித் டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஹிங்கோலியில் உள்ள அவரது பாட்டி இன்று காலமானார். இதனால் அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனரான அபிஜீத் திப்கேவின் தந்தைவழி பாட்டி சாவித்திரிபாய் திப்கே (85) காலமானார்.

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த கிராமமான சந்துரு பிம்ப்ரியில் (Santuk Pimpri) வசித்து வந்த சாவித்திரிபாய், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக, அபிஜீத் திப்கே தனது கட்சி நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோருடன் மும்பையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தார். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்திற்குள்ளேயே வைத்து அபிஜீத் திப்கேவை டெல்லி போலீசார் கைது செய்து காவலில் எடுத்தனர்.

அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரது பாட்டி காலமான செய்தி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிஜீத் திப்கேவின் பெற்றோர் பகவான் திப்கே மற்றும் அனிதா ஆகியோர் தற்போது சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவர்களின் வீட்டில் உள்ளனர். டெல்லி போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க அவர்களின் வீட்டைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், பாட்டியின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக சொந்த ஊரான ஹிங்கோலிக்குக் கிளம்பவுள்ளதாகக் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி போலீஸ் காவலில் இருக்கும் அபிஜீத் திப்கேவுக்கு அவரது பாட்டியின் மறைவுச் செய்தி இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தத் துயரச் செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைப் போலீசார் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் படிவம் 6 மாற்றங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author