குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Estimated read time 1 min read

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் நாள்தோறும் இரவு அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

குலசை முத்தாரம்மன் அருள் பெற இந்த பாடலை கேளுங்க

இவ்விழாவில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், காளி வேடம், அம்மன், சிவன், பெண்கள் வேடம், குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து, காணிக்கை பெற்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. தசரா திருவிழாவையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author