சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தகவல் மையம் அக்டோபர் 11ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் 3வது காலாண்டில், நுகர்வு, அன்னிய வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் பல உயர் அதிர்வெண் தரவுகள் சீராக இயங்கி வருகின்றன.
நேரடி நுகர்வு தரவுகளின்படி, 3வது காலாண்டில், பல்வேறு நுகர்வுகளுக்கான செலவுத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.6 விழுக்காடு அதிகமாகும். அதன் அதிகரிப்பு வேகம் 2வது காலாண்டில் இருந்ததை விட 0.7 சதவீதப் புள்ளிகளை அதிகரித்து காணப்பட்டது.
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தகவல் மையத்தின் பெருந்தரவு வளர்ச்சி பிரிவின் துணைத் தலைவர் வெய் யிங் கூறுகையில், 3வது காலாண்டில், சீனாவில் நுகர்வை முன்னேற்றுவதற்கான பல்வேறு கொள்கைகள் தொடர்ச்சியாக வலுப்படுத்தப்படுவதுடன், பொது மக்களின் நுகர்வு ஆர்வம் சீராக அதிகரித்து வருகிறது. சந்தைகளின் நுகர்வு தேவை விடுவிக்கப்பட்டு, பெரிய அளவிலான சந்தையின் மேம்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. உள் நாட்டுத் தேவையை விரிவுப்படுத்தி, அதிகரிப்பை நிதானப்படுத்துவதற்கு இது வலுவான ஆதரவளித்துள்ளது என்றார்.
