மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 1 min read

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Navarathri special song கேட்க இங்கே click செய்யுங்க

இரவு 10.30 மணிக்குப் பிறகு, மேளதாளங்கள் முழங்க உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளினார். பூசாரிகள் தாலாட்டுப் பாடி தீபாராதனை காட்ட, பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் பாடல்

விழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

You May Also Like

More From Author