சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஒத்துழைப்பே முக்கிய திசை

சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆலோசனை அமைப்புமுறைக்கான 2ஆவது முறையான கூட்டம் அக்டோபர் 8、9ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், 16 சாதனைகளும் ஒருமித்த கருத்துக்களும் எட்டப்பட்டன. மேலும், இந்த ஆலோசனை அமைப்புமுறைக்கான 3ஆவது முறையான கூட்டம் 2027ஆம் ஆண்டின் மார்ச் திங்களில் நடைபெற இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம், கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி உரிய முறையில் அவற்றை கையாளும் விருப்பத்தை சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.

சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாக திகழ்கின்றன. ஒத்துழைப்பானது இரு தரப்பு உறவுக்கான அடிப்படை திசையாக உள்ளது. உலக அளவில், சீனா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த பொருளாதார உற்பத்தி அளவு, உலகின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகவும், அவற்றின் வர்த்தக அளவு உலக வர்த்தகத்தில் கால் பங்கிற்கும் அதிகமாகவும் உள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கான முக்கிய காரணம், சீன வளர்ச்சியால் ஏற்பட்ட “தாக்கம்” அல்ல. உள்புறத்திலிருந்து நீண்டகாலமாக உருவாகிய பிரச்சினைகள் ஆகும். சிக்கலான கண்காணிப்பு முறைமை, சந்தையைத் துண்டு துண்டாக்குதல் மற்றும் எரிசக்திகளின் உயர் விலைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் சேவை வர்த்தக உபரி 4830கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதில், அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்தும் தொகைக்கு மட்டும் சீனா ஆண்டுதோறும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏறக்குறைய 1000கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டியிருக்கும். சேவை வர்த்தகம், சரக்கு வர்த்தகம் ஆகிய துறைகளை பன்நோக்க மதிப்பீட்டை சேர்த்தால், இரு தரப்புகளுக்கிடையேயான ஒட்டுமொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வு கணிசமாகக் குறைந்துள்ளது.”வர்த்தக உபரி சீனாவிலும் லாபம் ஐரோப்பாவிலும் உள்ளன ”என்ற நிலைமை, சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தின் உண்மையான தோற்றமாகும்.

தவிர, வாகனப் பிரச்சினையை தொடர் பேச்சுவார்த்தையில் சேர்த்துள்ளது என்பது, இந்த முறையான கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள மிகப் பெரிய சிறப்பாகும். கலப்பின வாகனங்களின் வர்த்தகம் குறித்து இரு தரப்பும் புரிந்துணர்வை எட்டி, மின்சார வாகனங்கள் மீதான மானியத்துக்கு எதிரான வழக்கிற்கான நடைமுறைகளை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இவ்வாண்டு சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டாகும். இது ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விரிவான சந்தை வாய்ப்புகளை வழங்கும். சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்மேளனம் மே திங்கள் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பில், சுமார் நிறுவனங்களில் 68விழுக்காட்டு நிறுவனங்கள் சீனாவில் தங்கள் அலுவனலைத் தொடரவும் அல்லது விரிவுபடுத்தவும் விரும்புவது தெரியவந்துள்ளது.

You May Also Like

More From Author